எங்கள் பிள்ளையார்
பிள்ளையார்
---------------------
பிள்ளையாரப்பா , பிள்ளையாரப்பா
சக்தி சிவா பாலனே பிள்ளையாரப்பா
ஏழைக்கும் எளியபிரான் பிள்ளையாரப்பா
எல்லார்க்கும் ஏற்றம் தருபவனே பிள்ளையாரப்பா
பெரும் கோயிலிலும் குடியிருப்பான் பிள்ளையாரப்பா
ஆற்றோர அரசின் அடியிலும் காட்சிதரும் பிள்ளையாரப்பா
அன்று அவ்வையின் நாவில் அமர்ந்தகோன் பிள்ளையாரப்பா
அவ்வையை எங்களுக்கு 'ஆத்திச்சூடி' எழுதிவைத்த பிள்ளையாரப்பா
'அனுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பலாய்' இருப்பவன் நீ
என்று அவ்வைப் போற்றியது உன்னை அகவலில்தான்
படிக்கும் பிள்ளைகளுக்கு வேண்ட வேண்ட ஞானம்
தருவான் என்றும் எங்கள் பிள்ளையாரப்பா
தாயும் தந்தையும் உலகு என்று தன்
அருமைத் தம்பிக்கும் போதுதான் பிள்ளையாரப்பா
தோப்புக்கரணம் போட்டு நெற்றியில் குட்டும் இட்டு
சாஷ்டாங்கமாய் வணங்கி எழுந்து
சுண்டலும் கொழுக்கட்டையும் நைவேத்தியம் செய்தால்
அகமகிழ்வான் வெகுவே நம் பிள்ளையாரப்பன்
எல்லா நனமையும் நல்கிடுவான் பிள்ளையாரப்பன்
போற்றி போற்றி பிள்ளையாரப்பா
போற்றி போற்றி பூரணா போற்றி
வேதா முதல்வனே போற்றி போற்றி
எளிமை நாயகனே போற்றி போற்றி
பிள்ளையாரப்பா பிள்ளையாரப்பா
சக்தி சிவா பாலனே பிள்ளையாரப்பா