எங்க குளம்
எங்க குளத்து தண்ணீரு
இப்ப நினைச்சாலும் இனிக்குது
சேலையில மீன் பிடிச்சு - ஓட்ட
பானையில வேகவைச்சு
வெந்தும் வேகாம
தின்றது ஙபகம்
அஞ்சாறு அயிரமீனு
அப்பப்ப அம்புட்டு ருசி
அஞ்சாறு வயசுல
பஞ்சரானா டியூப்ல
நீச்சல் கத்துகிட்டேன்
அங்கதான அப்பாவோட
தலைமுறையும் மாறிப்போச்சு
ஊரும் தறுதலயா ஆகிப்போச்சு
குளமெல்லாம் குட்டையாச்சு
குட்டையெல்லாம் குப்பையாச்சு
ஆடு மாடு குடிக்காததா
அந்த தண்ணி ஆகிப்போச்சு
அனைத்தையும் பழிச்சோமே
இயற்கையை அழிச்சோமே