சிறு துகளாய்கூட அல்லாமல்

அடர்ந்த கானகம்...
இருள் எங்கும் சூழ்ந்திருக்க
வானுயர்ந்த மரங்களின்
சிறு சிறு இடைவெளியில்
தெறித்து விழுகிறது
ஆதவனின் ஒளிக்கற்றைகள்...
புள்ளிணங்களின் சப்தம்
செவிதனை நிறைக்க...
கானகத்தின் வாசம்
நாசியை துளைக்க...
உதிர்ந்து கிடக்கும்
காய்ந்த சருகுகளில்
காதலோடு
உராய்ந்து செல்லும்
குளிர்ந்த காற்று
இதயத்தோடு
இணக்கம் கொள்ள...
எங்கோ விழும்
அருவியின் சாரல்
மெய்யோடு
ஊடல் கொள்ள...
யாரும் அறியாத வண்ணம்
தொலைந்து போகவேண்டும்...
கானகத்தின் நிசப்தத்தில்
சிறு துகளாய்கூட அல்லாமல்
முழுவதுமாய்
கரைந்து போய்விட வேண்டும்!

எழுதியவர் : தேவராஜ்கமல் (16-Sep-21, 6:03 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 109

மேலே