மரணம் மட்டும்

யாரோ ஒரு கவிஞன்
சொன்னான்,

மௌனமாக
விலகினால் மட்டுமே
நினைவுகள்
பசுமையாக இருக்கும்.

நீயும்
என்னிடமிருந்து
மௌனமாகத்தான்
விலகினாய்...

எனக்கு மட்டும்
மௌனம் சம்மதமல்லை
என்பதால் தானோ
என்னவோ,

இன்றுவரை
உன் மௌனம்
கொன்று கொண்டிருக்கிறது
என்னை...

எனக்குத் தெரியும்,
உன் மனதில்
நான் எப்போதோ
இறந்து விட்டேன்,
மௌனம் மட்டும்
வாழ்ந்து கொண்டிருக்கிறது.....

ஆனால்

உனக்குத் தெரியுமா..?
என் மனதில்
நீ இன்னும் இறக்கவில்லை
நான் எப்போதோ
செத்துப் போயிருக்க,
மரணம் மட்டும்
வாழ்ந்து கொண்டிருக்கிறது....
✍️கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (23-Sep-21, 4:07 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : maranam mattum
பார்வை : 129

மேலே