இதழ் முத்தம்

இனியவளே
என் இதயத்தில்
ஆறாத காயங்கள்
வலியுடன் தவித்தது ..!!

என் மனதின் காயங்களை
உன்னிடம் சொன்னேன்
நீ அமைதியாக கேட்டு
என்னை மென்மையாக
அரவணைத்து

என் இதழுடன்
உன் இதழ் பதித்து
அருமருந்துபோல்
"முத்தம்"
ஒன்று கொடுத்தாய்
அந்த முத்தத்தில்
என் மனதின் காயங்கள்
கரைந்து விட்டது கண்ணே ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Sep-21, 9:34 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ithazh mutham
பார்வை : 118

மேலே