வெல்லட்டும் நட்பு

பார்க்கவில்லை பழக்கவுமில்லை
பேசவில்லை சிரிக்கவுமில்லை
குத்தகை எடுத்ததுபோல கொந்தளிக்கிறார்கள்

தோழி என்று நினைத்தேன்
துப்பட்டாவை சரிசெய்தேன்
காதலிக்கிறானோ என்று பிதற்றுகிறார்கள்

விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்
வேரறுந்த விருச்சம் என்று சொல்லி
விரட்டுகிறார்கள் சாயம் பூசி.

காதல் என்பது பொதுவுடமை
சாதி எங்கிருந்து வந்தது
ஏன் நல்ல உள்ளம் இருந்தாலும் வெறுக்கிறார்கள்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்றார் பாரதி
மீதியும் உள்ளதடி பாப்பா என்கிறார்கள்.

சாதி ஒழியட்டும் சமத்துவம் பிறக்கட்டும்.

எழுதியவர் : விஜய் பாரதி (28-Sep-21, 2:24 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : vellattum natpu
பார்வை : 74

மேலே