நியாயத் தராசு

கையில் தராசு இருந்தால்
நியாயங்கள் கிடைத்துவிடும்
என்று எண்ண வேண்டாம்...!!

தராசு தட்டில் வைக்கப்படும்
எடைக்கல் மற்றும் பொருட்களின் தன்மையை பொறுத்துதான்
நியாயங்களும் தர்மங்களும்
அளக்கப்படுகிறது...!!

யாரிடமும் உங்களுக்கான
நியாயத்தை எதிர்பார்த்து
ஏமாற்றம் அடைய வேண்டாம்..!!

அவரவர் கையில் இருக்கும்
தராசு அவரவர்களுக்கு உரிய
நியாயத்தை மட்டுமே
சரியென்று சொல்லும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Sep-21, 10:43 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 112

மேலே