ஏனோநான்
என் கண்ணிலும் கண்ணீர் துளிகள்
இருக்கிறது என தெரியபடுத்திவிட்டு
எனக்குள் இருக்கும் காதலை மட்டும்
தெரிந்துகொள்ள மறந்தாய் ஏனோ.....???
காயத்தால் வலியை கொடுத்துவிட்டு
காதலை காட்டி ஏமாற்றுவது ஏனோ......???
காயத்தை என்னுள் மறைத்துக்கொண்டு
உன் காமத்தை வெளிப்படுத்திய போது
கலங்காமல் இருந்தேனே - அதனை
புரிந்து கொள்ளவில்லை ஏனோ........???
எனக்கு வலித்தாலும் உனக்கு
சுகத்தை காட்டியபோது
தெரியாமல் நடிப்பது ஏனோ.......???
காதலை கொடுத்து
காமத்தை எடுத்து
வலியுடன் அழையவிடுவது ஏனோ......???
ஆசையில்லா அரவணைப்பை கொடுத்து
அர்த்தமில்லா அன்பைக் காட்டி
என்னையே என்னிடமிருந்து பறித்தது ஏனோ......???
தொலைவில் இருந்தாலும் அருகில் இருப்பதுபோல்
உணரவைத்து - இப்போது
அருகிலே இருந்தாலும் தொலைவில் இருப்பதுபோல்
உணரவைப்பது ஏனோ......???
மடியில் விழுந்த பரிசாய் என்னை
எண்ணியபோது - இப்போது
இடியாய் நினைத்தது ஏனோ......???
இதன் காரணமே தெரியாமல்
கலங்கிய நிலையில் நான்.......!!!🥺🥺