மூன்றாம் பிறை
நெருங்கி பழகினோம்
நம் நெருக்கத்திற்கு
"காதல்" என்று
பெயர் சூட்டி மகிழ்ந்தோம் ..!!
"வான் நிலவு" வளர்வதுபோல்
நம் காதல் வளர்ந்தது
திருமணம் என்னும்
வாழ்க்கை பந்தத்தில்
இருவரும் இணைந்தோம் ..!!
"தேன் நிலவும்"
சென்று வந்தோம்
ஊரும் உறவும் கூடி நடந்த
நம் திருமணத்தில்
யாருடைய கண்பட்டதோ
தெரியவில்லை ...??
"வான் நிலவு" தேய்வதுபோல்
நம் உறவு ..நாளாக ...நாளாக
தேய்ந்து கொண்டே வந்து
"மணமுறிவில்" முடிந்து
திருமண வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது ..!!
விவாகரத்து பெற்ற பின்பும்
என் கனவில்
"மூன்றாம் பிறை" போல்
நீ வந்து போவதை என்னால்
தடுக்க முடியவில்லை ..!!!
--கோவை சுபா