காரணம் புரியவில்லை
என் இனியவளே
கடற்கரையில்
உன் வரவுக்காக நான்
காத்திருக்கும் போது...!!
நம் "காதல் வாழ்க" என்று
மணல் மேல் எழுதினேன்
அலை வந்து அழித்து விட்டது ...!!
நீரின் மேல் எழுதினேன்
கரைந்து விட்டது ...!!
என்ன செய்வது என்று யோசித்து
அருகில் இருந்த
கற்பாறை மேல் எழுதினேன்
அது நிலைத்து நின்றது...!!
கற்பாறை மேல் எழுதிய காதல்
நிலைத்து நின்றது ....!!
ஆனால்
ஏனோ தெரியவில்லை
உன் காதல் நெஞ்சம்
திடீரென்று கல்லானது
என்ன காரணமென்று
புரியாமல் தவிக்கின்றேன்...!!
கற்பாறை மீது நம் காதலை
எழுதியது குற்றம் என்றால்
நானே அழித்து விடுகிறேன்...!!
--கோவை சுபா