ஒரே பேருந்துக்குள்

என்னைப்போலவே அவர்களும்
யார் பயணமும் யாருக்கும் தெரியவில்லை
இருந்தும் பயணம் செய்கிறோம்
ஒரே பேருந்துக்குள்
அடிக்கடி தனிமையே மறக்கடிக்கிறது
ஜன்னல் வழியே வந்த காற்று
மறந்த நினைவுகள் மீண்டும் தொடர
தொடர்ந்த நினைவுகள் மீண்டும் மறக்க
கால பயணம் சாத்தியமானது
எல்லா நேரங்களிலும் எல்லா பாடல்களும்
பிடித்திருப்பது பேருந்தில் மட்டும்தான்
பேருந்தை விட்டு இறங்கி
பயணச்சீட்டை பறக்கவிட்டேன்
என் பயணம் முடிவதும்
பயணச்சீட்டின் பயணம் தொடங்கியதும்
ஒரே புள்ளியில்

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (10-Oct-21, 7:21 pm)
சேர்த்தது : t akilan
பார்வை : 103

மேலே