புதிய கிரகம்

🌴🌴🌴🌴🌴🌴🌴

செவ்வாய்
கிரகத்தைப் போல
செழுமையான
கிரகத்தைக்
கண்டேன்

கனவில்லை
நிஜம்.

அங்கேயும்
காற்றுண்டு
நீருண்டு,
காதலும் உண்டு.

ஆண்களை
இம்சிப்பதற்காகவே
அங்கே பெண்கள்.

எத்தனை
அடி வாங்கினாலும்
அங்கே
ஆண் மட்டும்
அழவே கூடாது.

சிறு
சிணுங்களில்
சாதித்துக் கொள்ளும்
பெண்கள்.

ஒரு
பெண்ணுக்கு
பல ஆண்கள்
சாத்தியம் மட்டுமல்ல,
சாதாரணம்
அங்கே.

ஆண்களை
அடிமைப் படுத்தி
சம உரிமை
என
பெண்கள்
முழங்கிடும்
வினோத கிரகம்
அது.

பெண்களுக்கு
மட்டுமேயான
அதிசய கிரகம்.

அங்கே
ஆண்களுக்கு இல்லை
கடவுள் எனும்
சாமி...
அந்த கிரகத்தின்
இன்னொரு பெயர்
பூமி...
ஆழி சூழ் உலகு...!
.
✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (15-Oct-21, 1:36 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : puthiya kiragam
பார்வை : 62

மேலே