நானும் உன் நினைவுகளும்

உன் நினைவுகள்
என் உறக்கத்தை விலைபேசுகிறது
நான் மறுக்கிறேன்
தொடர்ந்து என் கனவில் தோன்றி
பேச்சுவார்த்தை நடத்துகிறது

உன் கலைந்த கூந்தல் நுனிகள்
என் மீது உரசும்போதெல்லாம்
என் புலன்கள்
சிலிர்ப்புத் துளிகளில் நனைகிறது

எனக்குத் தெரிந்தவரை
உலகிலே மிகச்சிறந்த
புனிதமான வார்த்தைகள்
நம் விழிகள்
பேசிக்கொள்வதுதான்

உனக்காக நான் காத்திருக்கும்
ஒவ்வொரு மணித்துளிகளிலும்
உன் நினைவுகளின் வாசம் அப்பிக்கிடக்கிறது

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (16-Oct-21, 8:37 am)
பார்வை : 248

மேலே