எது பக்தி

பக்தி த்யானம் என்ற சொற்கள் கேட்டு
நகர்ந்து விடாதே இப்போது உன்மனம்
அவள் அவளென்று அவள் மீது செலுத்துவதும்
பக்திதான் சதா அவளை நினைப்பதும் பக்தியே
ஆனால் இவை 'அவன்' மீது நீ கொள்ளவேண்டிய
பக்திக்கு வாழ்வில் 'அவனே' அமைத்த அஸ்திவாரம்
இதுவே சனாதன தர்மத்தில் காணும்
வர்ணாஸ்ரம தர்மம் புரிந்துகொள் மனமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Oct-21, 5:08 pm)
Tanglish : ethu pakthi
பார்வை : 80

மேலே