எனக்கு வராது

எனக்கு வராது!

எனக்கு வராது
என்றிருப்பார்,
கொட்டி கொட்டி
சமைத்திடுவார்,
ஒரு நாள்
தெரிந்து விடும்,
தலை சுற்றி
விழும்போது!

எனக்கு வராது
என்றிருப்பார்,
கொட்டி கொட்டி
குடித்திடுவார்,
ஒரு நாள்
தெரிந்து விடும்,
ஆறாப் புண்
வரும்போது!

எனக்கு வராது
என்றிருப்பார்,
பொரித்து பொரித்து
தின்றிடுவார்,
ஒரு நாள்
தெரிந்து விடும்,
பக்கவாதம் வந்து
படுத்திடும் போது!

அப்புறமும்
திருந்த மாட்டார்,
" பிறந்தவர் எல்லாம்
ஒரு நாள் சாவது
நிச்சயம் " என்பார்

கஷ்டப்படுவது,
நீயோ நானோ?
என்பான்,
அவன் பேச்சை
பிடியாதவன்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (23-Oct-21, 1:47 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : enakku varaathu
பார்வை : 55

மேலே