வசந்தமே இனிமைதான்

சோலையெல்லாம் பூத்துக்குலுங்கும் பூக்கள் ஆயிரம்
எங்கும் குதுகூலம் குயில் இசைக்க மயிலாட
வண்டுகள் ரீங்காரம் யாழின் இசையாய் ஒலிக்க
மஞ்சள் வானம் புதுமலர் வாசம் ஏந்தி
வீசிடும் தென்றல் காற்றின் சுகமே சுகம்தான்
மஞ்ச பூசிய வானம் அங்கும் இங்கும் நடமாடும்
வெண்ணிற மழை மேகம் கொஞ்சம்
மறையும் கதிரவன் ஒளிபட்டு வானவில்லானது
இதோ நானும் என்னவளும் மெல்லப் பெய்திடும்
இன்ப மழையில் எம்மையும் மறந்து நனைந்திருக்க
வசந்தமே உன்வரவில் மண்ணில் இனிமையே
என்று எங்கிருந்து காதில் ஒலிக்கும் இசையின் இனிமை
வசந்தமே நீத்தாரும் காதல் சுகமே சுகம்தான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-Oct-21, 2:04 pm)
பார்வை : 173

மேலே