செய்ந்நன்றி யறிதல் 2 - நேரிசை வெண்பா
கன்னியப்ப வெண்பா - செய்ந்நன்றி யறிதல் - திருக்குறள் - அதிகாரம் 11
நேரிசை வெண்பா
தேர்வெழுதக் கட்டவுந் தேவையான கட்டணம்
ஓர்ந்துதான் கட்டினார் கன்னியப்பா! - பார்த்துதான்
காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது 11:2
கருத்துரை:
பட்ட மேற்படிப்பு படிக்கும் போது இறுதித் தேர்வுக்குப் பணம் கட்டச் சிரமப்பட்ட போது என் நண்பர் நான் சொல்லாமலே அறிந்து எனக்காகப் பணம் கட்டினார். அவர் செய்த உதவி எனக்கு மிகப்பெரியது.