அஷ்டமூலம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கோரை யரிகரந்தை கூலங்க ளூசிகஞ்சாங்
கோரையா டாதோடை கோத்துளசி - வீரியபற்
பாடக மிவ்வெட்டும் பல்விஷக்கு ழாமிரியச்
சாடுமஷ்ட மூலமென்பர் தாம்
- பதார்த்த குண சிந்தாமணி
முத்தக்காசு, விட்ணு கிரந்தை, பேய்ப்புடல் வேர், சீந்தில் வேர், கஞ்சாங் கோரை, ஆடாதோடை, கருந்துளசி, பற்பாடகம் இவற்றின் வேர்கள் விடங்களைத் தீர்க்கும்