தசமூலம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வில்வம் பெரியகுமிழ் மென்னெரிஞ்சில் முன்னையிரு
மல்லி சிறிய வழுதுணைவேர் - நல்லகண்டங்
கத்தரி,புன் காலிபெரு வாகையிவை வன்னோயைக்
குத்துத் தசமூலங் கூறு

- பதார்த்த குண சிந்தாமணி

வில்வம், பெருங்குமிழ், யானைநெருஞ்சில், முன்னை, சிறுமல்லிகை, சிறுவழுதுணம், கத்திரி, பாதிரி, பெருவாகை, இப்பத்தும் (தசமூலம்) கடினமான நோய்களைத் தீர்க்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Nov-21, 7:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே