மாயஞ்செய்யும் சட்டம்

வெளிவிருத்தம்

ஒரேயொரு சட்டம் இயற்றி ஒழித்திடலாம் - சாதியையே
பெரியதாய் ஏற்றங்கள் செய்து விலக்கிடலாம் - சாதியையே
அரியதான வேலையைக் கொடுத்தும் விரட்டலாம் - சாதியையே
உரியதென ஏற்போருக்கு ஒரேபெயரில் ஒதுக்கலாம் - சாதியையே --- (1)

சட்டமென்ற ஒன்றினாலே பாரதத்தின் மாநிலங்கள் - இணைந்து
கட்டியமும் கூறிடவே பன்மொழி மக்களெலாம் - இணைந்து
கட்டுபாடுடன் தேசத்தின் நலங்காத்திட அனைவரும் - இணைந்து
திட்டமிட முனைந்தபோது சிதைக்கின்றனர் அரசியலர் - இணைந்து --- (2)

அரசியலின் வளர்ச்சியாலே அறங்கள் எல்லாம் - கெட்டுப்போச்சு
அரவம்போல் அவர்கள் வளரவே அனைத்துறவும் - கெட்டுப்போச்சு
பெரியதவறு செய்வோனை பிடிக்கின்ற துறையும் - கெட்டுப்போச்சு
நரியெனவே இருக்கும் தலைவனாலே நாடுமுழுவதும் - கெட்டுப்போச்சு --- (3)

மொழியின் பெயராலே பெரியதவறு நடந்தது - தமிழ்நாட்டிலே
அழகுமொழியை சிதைத்திட அந்நியர் சேர்ந்தனர் - தமிழ்நாட்டிலே
மொழியைப் புறம்பேசி மறைக்கவே முயற்சித்தனர் - தமிழ்நாட்டிலே
கழியைத் தாங்கியோரும் அருந்தமிழைப் பழித்தனர் - தமிழ்நாட்டிலே --- (4)

திறம்பட திட்டங்களை நிறைவேற்றி வைத்தனரே - இருசபையில்
வெறும்பாடு பட்டுவாழும் மக்களுக்காக பேசினரே - இருசபையில்
வறுமையை மாற்றிட அருமையாய் நிதியொதிக்கினர் - இருசபையில்
மறுப்பின்றி பணத்தை தனததாக்கினர் நமதுபிரதிநிதி - இருசபையில் --- (5)
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Nov-21, 5:01 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 619

மேலே