வான் மழையே… வந்து வந்து போ

#வான் மழையே… வந்து வந்து போ..!

வாவென்று சொன்னால்
வந்திடு மாமழை..?
நில்லென்று கெஞ்சிட
நின்றிடு மாமழை…?

வாராத காலத்தில்
வாட்டும் வறட்சியில்
வந்திட்ட போதிலோ
வைத்திடும் வெள்ளத்தில். !

வேண்டும் வேண்டுமென்று
வேண்டி வந்தமழை
வந்து மூழ்கவைத்து
வாட்டிடுதேத் தொல்லை..

நெல்லு வயலினில்
நீந்திக் களிக்குது
வேர்வரையும் சென்று
வெட்டியே சாய்க்குது..!

கூரை வீட்டில்வந்து
கும்மாளம் போடுது
குந்தி அழுவார்க்கு
கூழுங் கஞ்சியேது…?

தெப்பம் விடுகின்றார்
தெரு வீதியெல்லாம்
கண்ணில் மழைவெள்ளம்
காத்திடுமா தெய்வம்..?

சீற்றங் கொண்டேவந்து
சிந்திய துபோதும்
வந்த வழி செல்வாய்
வான்மழையே நீயும்…!

வறட்சி யண்டாது
வந்து வந்து போவாய்
எண்ணுகி றோம் உன்னை
எங்கள் கடவுளாய்…!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (8-Nov-21, 12:15 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 302

மேலே