ஆற்ற அறவரணம் ஆராய்ந்து – அறநெறிச்சாரம் 22

நேரிசை வெண்பா
(’ப்’ ‘ற்’ வல்லின எதுகை)

மூப்பொடு தீப்பிணி முன்னுறீஇப் பின்வந்து
கூற்ற வரசன் குறும்பெறியும் - ஆற்ற
அறவரண மாராய்ந் தடையினஃ தல்லால்
பிறவரண மில்லை யுயிர்க்கு 22

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

முதுமையையும் கொடிய நோயையும் முன்னரடைவித்து எமனாகிய அரசன் பின்னர் வந்தடைந்து உடலாகிய அரணை அழிப்பான்;

பலவற்றாலும் ஆராய்ந்து மிக்க அறமாகிய பாதுகாவலை அடைந்தாலன்றி உயிர்களுக்குப் பாதுகாவலான இடம் வேறொன்றுமில்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Nov-21, 6:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே