தேசிய சட்ட தினம்
வறுமையில் வாடும் ஏழைகள்
வயிற்று பசிக்கு திருடுவதை
கடுமையாக வஞ்சித்துவிட்டு
பெண்களை பாலியல் தொல்லைகள்
செய்யும் கும்பலையும்
கோடிகளை சுரண்டும்
கொடியவர்களையும்
நாட்டில் தொடர்ந்து தவறுகளையும்
குற்றங்களையும் அடுக்கி கொண்டே
செல்லும் கயவர்களையும்
குடும்ப பகைக்காக கொடூர கொலைகளை
செய்யும் கொடிய மிருகங்களையும்
கவுரவ கொலை என்று சொல்லிக்கொண்டு
பல உயிர்களை பறித்த கொலைகாரர்களை
கொஞ்சுகின்றது பாசிச தேசம் பாகுபாடற்ற
ஒரு பட்சமான சட்டம் பல நேரங்களில் நம்முடைய
சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்லிக்கொண்டு
இருக்கிறோம் ஆனால் பல நேரங்களில் நம்முடைய
சட்டம் பணத்திற்காகவும் அதிகாரத்திற்கும் துணைபோகின்றன
பல நேரங்களில் மக்களை காக்க வேண்டிய
சட்டம் உறங்கிவிடுகிறது கயவர்கள் போடும் திட்டம் வென்று விடுகிறது
இவைகள் அனைத்தும் மாற வேண்டும் வரும் காலங்களில்
நம் சட்டம் சம நீதியுடன் மனிதநேயத்தோடு மக்களுக்காக
செயல்பட வேண்டும். இன்றைய சட்டம் பிறந்தநாளில் இருந்து
உருவாகட்டும் நியாயமான நீதியான நிலையான நேர்மையான சட்டம்