வெண்காலி மரவேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

விம்மு மகோதரமும் மேல்நோக்கு பித்தமொடு
சிம்(ம)கிருட்ண தோடமுமுட் சேருமோ - கம்முகின்ற
கள்ளைப் பொருநீருங் காணாது கைப்பையுறும்
வெள்ளைக் கருங்காலி வேர்க்கு

- பதார்த்த குண சிந்தாமணி

கசப்புச் சுவையுடைய வெண்காலி மரவேர் பெருவயிறு, ஏறுபித்தம், நாக்கைக் கறுக்கச் செய்யும் கிருட்டிண சிம்ம தோடம், சுறாமேகம் இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-21, 11:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே