நுணா சமூலம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பட்டை கரப்பனொடு பாரச்சி லேஷ்மசுரம்
ஒட்டிநின்ற புண்கிரந்தி யோட்டுங்காண் - மட்டலரை
ஏந்து நுணாவின் இலைமந்தந் தீர்த்துநல்ல
காந்திதரு மேகமடுங் காண்

நுணாப்பட்டை, கரப்பான், கபச்சுரம், புண், கிரந்தி இவற்றைப் போக்கும்; இலை மந்தம், மேகம் இவற்றை விலக்கும்; ஒளியைத் தரும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-21, 11:21 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே