தமிழின் வருங்காலம்
காதல் என்றோர் வார்த்தை கிறுக்க
மொய்க்கிறார் ஏராளம் எழுது வோர்க்கிது
ஊக்கம் தரவவர் குவிக்கின் றாரே
அவித்து அரைவேக் காடாய் பலதை
இத்தளத் திலேயும் பாரு
தமிழையும் கெடுப்பராம் வளர்த்திடார் இனிதே
ஒப்பு வெண்பா
புதுக்கவி வந்து புனையும் கவிதை
எதுவாகின் என்ன இலக்கணம் இல்லை - சதியாய்
எதிலும் பிழைச்சொற்கள் ஏராளம் செய்தார்
பதிலாய் திருந்துவரோ பார்