நாங்கள் ஒரு வாக்குறுதி அளித்தோம்

காதலர்களின் வாக்குறுதி
காதல் அரங்கேறும் வரைதான்
அரசியல்வாதியின் வாக்குறுதி
ஆட்சிக்கு வரும் வரைதான்
ஏமாற்றுபவர்கள் வாக்குறுதி
பிறர் ஏமாறும் வரை தான்
இப்படி பலர் இந்த உலகில் நாங்கள்
வாக்குறுதிகளை கொடுத்தோம் என்று
சொல்லிக்கொண்டு அதன் மூலம் ஆதாயம்
அடைவதற்கே முயற்சி செய்கின்றனர்

எழுதியவர் : முத்துக்குமரன் P (4-Dec-21, 6:59 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 21

மேலே