நான் உர் Ur - என் தங்கை புர் Pur
ஏன்டி பொண்ணுங்களா, நீங்க எந்த ஊருக்காரங்கடி?
########
நாங்க நாகப்பட்டினம். உங்க பக்கத்துத் தெரு பங்காளி பன்னீர்செல்வத்தோட பேத்திங்க.
#####
ஓ... அப்பிடியா? உங்க ஊரெல்லாம் எப்பிடி இருக்குது? வெள்ள பாதிப்பு இருக்குது?
தண்ணீர் வடிஞ்சிருச்சா?
#######
உம். புயல் வரமா இருந்தா போதும். எப்பப் புயல் வந்தாலும் அதிகம் பாதிக்கப்படறது எங்கே ஊர் தான் பாட்டி.
########
சரி. சரி. உங்க பேருங்களச் சொல்லுங்கடி.
#######
எம் பேரு 'உர்'. எந் தங்கை பேரு 'புர்'
@@@@@@
என்ன பேருங்கடி? 'உர்'ரு - 'புர்'ரு. ச்சே...ச்சே. உங்க பேருங்க கொஞ்சங்கூட நல்லா இல்லடி பிள்ளைங்களா?
#########
என்ன செய்யறதுங்க பாட்டி. தமிழ்ப் பேருங்கள வைக்கக்கூடாது. இதுதானே நம்ம தமிழ் மக்களின் நாகரிகம். அதன்படி எங்க அம்மா, அப்பா எங்களுக்குப் பேரு வச்சிருக்கிறாங்க. அழகான அர்த்தம் உள்ள பேருங்க.
#######
சரி. அந்த அர்த்தங்களக் கேட்டு நான் என்னடி செய்யப் போறேன்.
■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆■■■■
Ur = Flame, light of fire. Indian, English, Egyptian origin.
Pur = Lost. Iranian (Persian), Latin, Sanskrit, Latin, Indonesian, Finnish, Spanish, Indian origin. Unisex name.