திரும்பவில்லை பார்க்கவில்லை சிரிக்கவில்லை ஏனோ
கவிதையில் வானை எழுதியபோது
நிலவு மகிழ்ந்து சிரித்தது
கவிதையில் தேனை எழுதியபோது
தேனீக்கள் சிறகடித்தன
கவிதையில் மானை எழுதியபோது
மௌனமாய் திரும்பிப் பார்த்தது
கவிதையில் தேனாய் மானாய் நிலவாய் உன்னை எழுதிய போதும்
திரும்பவில்லை பார்க்கவில்லை சிரிக்கவில்லை ஏனோ ?