காதல் புதிர்
திசை தெரியாமல் மனம் பறக்கிறது
தினம் தினம் உன்னை பார்க்க
கண்கள் தவிக்கிறது
காற்றில் அவள் கூந்தல் ஆடுகிறது
கண்கள் வெக்கத்தில் சிரிக்கின்றது
என் நிழல் அவள் பின்னால்
போகின்றது
நினைவுகள் சுகமாய் இருக்கின்றது
கடல் அலை போல் ஆசை வருகிறது
கனவு திரையில் அவள் முகம்
தெரிகிறது
காதல் சொல்ல இதயம் துடிக்கிறது
அவள் வருகையால் பூக்கள் வாசம்
விசுகிறது