பிறந்தார்

" இறைவன் இயேசு கிறிஸ்து
பிறந்த நாள்!
அதி உன்னதமான சிறந்த நாள்.

அம்மை மரியாளின் பிள்ளை,
நம்மை இரட்சிக்க வந்த கிள்ளை,

இன்று உதித்த நாள்,
இவ்வையகமே மகிழ்ச்சியில்
குதித்த நாள்!

மேரியின் மைந்தன் கால்
பதித்த நாள் ,
மூலோகமும் அவரைத் துதித்த
நாள்,

இந்நாள் பொன்னாள்!
இயேசு பிரான் பிறந்த நன்னாள் !

இன்று இன்பம் அது கூட ,
துன்பம் அது விலகி ஓட ,

ஜெபம் செய்து பாடுவோம்,
மகிழ்வோடு அவர் அருளை
நாடுவோம்."

எழுதியவர் : (25-Dec-21, 7:03 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : piranthar
பார்வை : 484

மேலே