உல்லாசம்
மூங்கிலிலே காற்று முத்தமிட்டுப் பாட்டாய்
முனங்குகின்ற சங்கீதம் முப்பொழுதும் உல்லாசம்
வாங்குகின்ற மூச்சு வற்றாத வரைக்கும்
வாழுகின்ற வாழ்வில் வருவதெல்லாம் உல்லாசம்
தூங்குகின்ற நேரம் தொடர்ந்துவரும் கனவு
தொந்தரவே இல்லாத் துணையாயின் உல்லாசம்
ஏங்குகின்ற நெஞ்சின் ஏக்கமெல்லாம் தீர
என்றென்றும் வாழ்வில் இணைந்திருக்கும் உல்லாசம்
**