முடியும் போது

முடியும் போது
💪💪💪💪💪💪
💰காசு பணம் வாழும் போது கார்கால ஞமலியாய்(மயிலாய்)
வண்ணங்களை விரித்தாட எண்ணங்களில் தோன்றச்செய்யும்...

💰💰 மானம் மதிப்பையுமே மாறல்(விற்றல்)செய்து விட்டு
ஏனம் நிறைத்திடுவாய்
ஈட்டுகின்ற பொன்பொருளால்...

🥗🥗🥗பலுக்கு(தற்புகழ்ச்சி)பேசிக்கொள்வாய் பலபேரின் முன்னிலையில்
உலக்கு தானியமும் ஓருயிர்க்கும் ஈந்துதவாய்...

💼💼💼ஒச்சம்(போர்) புரிந்தேதான் ஒருநொடியும் நில்லாமல்
மிச்சங்களைப் பிடித்தேதான் வச்சிடுவாய் எலிவலையாய்...

💀💀💀திரம் (பூமி)உன்னை திர(உர)மாக்கும் தெரிந்தேதான் திரம்(பூமி)தன்னில்
மரம் போன்ற மனதோடு மனிதருக்குள் முட்டல் மோதல்...

😰😰 இயலாமை நேரும்போதே இதயத்தில் துமுலம்(குழப்பம்) தோன்றும்...
இவ்வாழ்வில் இழந்து விட்ட எண்ணற்ற வாய்ப்பு பற்றி...

😩😩😩உற்றாரோ ஊன்றுகோலோ உதவிக்கு நீ தேடும்போது
மற்றற்ற கலுழ்(அழுகை)தோன்றும் மனிதத்துக்கும் பொருள் புரியும்...

😷😷😷 உயிர் போயின் உலகத்தில் தணிசான(விலைமலிவு)பொருளென்று
உன்உடல் தாண்டி உலகத்தில் வேறென்ன அறிந்திருந்தாயோ...

😖😖😖 உயிர் போன பதடி(உமி)என்று உற்றாருன்னை அறியும்போது
வயிர்தாண்டி உழைத்ததற்கு வருத்தப்பட்டு பயனென்ன...

😔😔😔தேசும்(அழகு)தேசும்(பலம்) குன்றும் போது தேடிடுவான் சுற்றமெல்லாம்
தேசுக்கும்(பொன்னுக்கும்) தேசுக்கும்(புகழுக்கும்) முறையான வாரிசு யாரென்று...

🙃🙃🙃முரம்பின்(நிலத்தின்)மேல் உயிரோடு உயிர்ப்பித்த கடவுளுக்கு
முரம்பின்(பாறை)மேல் நடுவிதையாய் இறுதிவரை காட்டிடுறாய்...

🕋⛪🕌கடவுளாய் நான்.......

👤👤👤படைத்துவிட்டேன் மண்மேலே பல்வாய்ப்புடன் பலகாலம்
நடித்து விட்டாய் மனித வேடம் பிறப்புனக்கு துகளிதம்(தூள்)தான்...

🤒🤒🤒 உன்னால் முடியும் போது உதவாமல் மூர்க்கத்தனம் காட்டிவிட்டு
வாழ்க்கை முடியும் போது வருந்துவதால் முடிவதுவோ ஒன்றுமில்லை...

🎁🎁🎁 வாழும் போது ஆசைப்படு வையத்தில் சில உயிர்க்கு
நீ பேசுபொருளாய் ஆகவேண்டும் இப்பிறவியது நிறைவுற்றால்.....

💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

எழுதியவர் : க.செல்வராசு (26-Dec-21, 9:36 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 134

மேலே