வீரமில்லானைப் படைத்துணை கோடல் வீண் – அறநெறிச்சாரம் 52

நேரிசை வெண்பா

புனைபடை கண்டஞ்சித் தற்காப்பான் றன்னை
வினைகடியு மென்றடி வீழ்தல் - கனையிருட்கண்
பல்லெலி தின்னப் பறைந்திருந்த பூனையை
இல்லெலி காக்குமென் றற்று 52

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

படைக்கலன்களை அணிந்துவரும் படையைக் கண்ட அளவிலேயே பயந்து தன்னைப் பாதுகாக்க விரைந்து ஒழியும் ஒருவனைப் பிறனொருவன் தனக்கு வந்த போரைப் போக்கென அவனடி வீழ்ந்து வேண்டுதல்,

நள்ளிருளில் பல எலிகளும் வீட்டிலுள்ள பொருள்களைத் தின்று கொண்டிருப்பதைக் கண்டு ஒன்றுஞ் செய்ய முடியாது வறிதே கூச்சல் செய்து கொண்டிருந்த பயந்த பலனற்ற பூனையை ஒருவன் தன் வீட்டு எலிகளின் துன்பத்தினின்று அது காக்குமென்று அதனை எண்ணியது போலும்.

குறிப்பு: பல + எலி – பல்லெலி, பறைதல் - ஒலித்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Dec-21, 9:27 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே