வாழைப்பூ - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாழைப்பூ மூலரத்தம் மாபிரமி வெட்டைபித்தங்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் - ஆழியனல்
என்னயெரி கைகால் எரிவுந் தொலைத்துடலில்
மன்னவளர்க் குந்தாது வை

- பதார்த்த குண சிந்தாமணி

இரத்த மூலம், பிரமேகம், வெள்ளை, பித்தம், கோழை, வயிற்றுக் கடுப்பு, இருமல், கைகால் எரிச்சல் இவற்றை நீக்கும்; சுக்கில விருத்தியுண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-21, 7:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே