வேப்பம்பூ - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(’த்’ ‘ற்’ வல்லின எதுகை)
பித்தத் தெழுந்த பெருமூர்ச்சை நாத்தோஷஞ்
சத்தத் தெழுவமனத் தங்கருசி - முற்றியகால்
ஏப்பமல கீட மிவையேகு நாட்சென்ற
வேப்பமல ருக்கு வெருண்டு
- பதார்த்த குண சிந்தாமணி
சன்னி, நாத்தோடம், மூர்ச்சை, வாந்தி, பேதி, நீடித்த வாதம், ஏப்பம், மலக்கிருமி இவை முதிர்ந்த வேப்பம் பூவில் நீங்கும்