சோழவந்தான் ’கன்ட்ரோல்’ கன்னியப்பர் - வஞ்சித் தாழிசை

வஞ்சித் தாழிசை
(தேமா காய்)

தொண்டை மண்டலத்தின்
பண்டு நற்குலத்தில்
பண்பில் உற்றதொரு
ஒண்மைக் கன்னியப்ப!

மக்கள் மன்றமதில்
மொக்குள் நல்மலராய்
மிக்கார் வேறுளரோ?
தக்கார் கன்னியப்ப!

என்றும் நெஞ்சினிலே
குன்றாய் நின்றிருந்தே
அன்பால் உள்ளிருப்பீர்
’கன்ட்ரோல்’ கன்னியப்ப!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jan-22, 12:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே