மாற்றாக
இன்று…
மாறாக எழுந்தேன்
எழுந்ததும் காலில் சக்கரமில்லை
மனதில் ஆயிரம் கேள்விகளில்லை
கண்ணாடியில் முகம் பார்க்கவில்லை
‘மின்ற்’ குடிக்கவில்லை
முகநூல் வரவில்லை
வெந்நீரில் குளிக்கவில்லை
சாமியை துன்புறுத்தவில்லை
பிடித்தது தேர்ந்து உண்ணவில்லை
யாருடனும் வார்த்தையாடவில்லை…..
நிச்சயமாய் இது புது வருடம் தான்!😊
நர்த்தனி