அறியும் அறிவே அறிவு அறியாமையை விட்டு விலகு

அறியும் அறிவே அறிவு;
அறியாமையை விட்டு விலகு;
குறையற்ற மனிதன் இக் குவலயத்தில் இல்லை;
குற்றத்தைக் குறைத்துக் கொள்ளாதவன் மனிதனில்லை;
பிழைசெய்யாதவன் மீது பழியைப்போடாதே;
பிழை செய்தவனை பிழிய நினைக்காதே;
பிழையின் தவறை புரியவை;
பிழைத்துப்போகட்டும் என்று
விட்டுவிடாதே.

ஞானம் பெற வன வாசம் வேண்டாம் ;
ஞாபகம் பெற ஞானிகள் வேண்டாம்;
ஞாலத்தில் வாழ நன்மை செய்;
வானத்தில் இல்லை சொர்க்கம், நரகம்;
வாழ்வுக்குப் பின் இல்லை, .
இந்த சொர்க்கம், நரகம்;
வாழ்வியலில் உண்டு சொர்க்கம் நரகம்.


இருளை வெளிச்சம் உண்ணுவதில்லை;
வெளிச்சத்திற்குள் இருள் பதுங்குவதில்லை;
இறந்த பின் உயிர் திரும்பி வருவதில்லை;
உயிர் போன பின் உடல் கிடைப்பதில்லை;
இனி உனக்கென்ன .கவலை.

வெளிச்சம் இருளை முடக்கும் விளக்கு;
வெளிச்சம் விளகினால் ஓடும் இருட்டு;
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பயம்;
மிரண்டவனுக்கு வெளிச்சத்திலும் பயம்;
அறியாமை இருளும் அப்படித்தான்.

அறியும் அறிவே அறிவு;
அறியாமையை விட்டு விலகு;
அறிய அறிய அறியாமைமையும் அகலும்;
விடிய விடிய பொழுதும் புலரும்;
புரிய புரிய தவறும் பு(பி)ரியும்;
அன்பாய் நீயும் பேசு;
பண்போடு பழகு.

தீமைக்கு தீமை செய்யாமல் இருந்தாலே தீது பயக்கும்;
ஞாயிறை இருள் மூடுவதில்லை;
நன்மையை தீமை தீண்டவதில்லை.


இருட்டையும் வெளிச்சத்தையும் உன்னுள் தேடு;
இறந்தபின் கிடைப்பதில்லை அருள்;
இருக்கும்வரை நல்லவனாய் இரு;
இதயத்தில் அன்பையும், பண்பையும், பணிவையும், இரக்கத்தையும் சுமந்திரு;
இருக்கும் வரை யாவருக்கும் பயன்பட்டு இரு;
இருட்டைப்பார்த்து பயந்து ஓடாமல் இரு;
விடியலை நம்பிக்கையுடன் தேடி ஓடு;
உன்னை வெல்லப் போவது யாரும் இல்லை
இந்த புவனத்தில் என்பதைக் கேளு.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (5-Jan-22, 6:44 pm)
பார்வை : 634

மேலே