தாய்மை
" மூளை பேசினால் தெளிவு,
கண்கள் பேசினால் காதல்,
காதுகள் பேசினால் அறிவு,
நாசியது பேசினால் வாழ்வு,
இதழ்கள் பேசினால் நட்பு,
இதயம் பேசினால் பாசம்,
கைகள் பேசினால் கோபம்,
கால்கள் பேசினால் பயணம்,
உடல் தொடங்கி நாடி, நரம்புகள்,
அனைத்தும்,
உயிருடன் சேர்ந்து பேசினால்?
அது 'தாய்மை!".