மாது மயக்கம்

செங்காந்தல் மலரில்
செதி ஒன்று குறிக்க
செவ்வந்தியை போல்
மலருதடி உன் முகம்..!!

சிவக்கும் மருதாணியாக
உன் தேகம் சிலிர்த்திட
சரமரியாக என்னில்
ஆசையும் பொங்குதடி..!!

இன்பம் கூடி
இனிமை தேட
எங்கிருந்தோ வந்ததடி
அன்பும் ஆசையும்..!!

வாழ்வில் காயமும்
கண்ணீரும் வந்து போகாக
வானம் அளவிற்க்கு
எழுதடி உன் நினைவும்..!!

நெஞ்சின் ஓரமாக
கட்டி வைத்த காதலை
கண்களின் வழியே
கலவடிய கன்னி நீயடி..!!

கார் இருளுக்குள்ளும்
கற்ப்புரமாக ஜெலிக்குதடி
உன் முகமும்
கண்டங்கி நீ உடுத்தையில்..!!

பாவையே என்
பசி தீருமடி
இந்த மாது
மயக்கத்தினால்..!!

எழுதியவர் : (15-Jan-22, 11:06 am)
Tanglish : maathu mayakkam
பார்வை : 44

மேலே