காதலை மறுத்த காதலியே......
காதலை மறுத்த காதலியே......
உனக்கு என்ன விலை வேண்டும்......
முழுவதும் என் மனம் விட்டு அகல......
என்னை வேண்டாம் என்றாயே ,,,,,
அந்நொடியே என்னை விட்டு அகன்றாயே,,,,,
முழுவதும் வெறுத்து புறக்கணிதாயே,,,,,
என்னுள் இருந்து போன போதே என் நினைவுகளை ஏன் எடுத்துச் செல்லவில்லை,,,,....
மீளத் துயரில் நலிந்து வாழ்கிறேன்.......
தினமும் தூக்கமின்றி சாகிறேன்......
உன்னை நினைக்க தெம்பு வேண்டும் என்பதற்காக உண்கிறேன்......
நாம் காதலித்த போது பேசிய பேச்சுக்கள் இப்போதும் என் காதில் இசையென ஒலிக்கிறது........
உன்னை வகுப்பில் ஓரகண்ணால் பார்த்து இன்புற்ற நாட்களை எண்ணி எண்ணி நாட்களை நகர்த்துகிறேன்......
என்னை தினம் தினம் கொள்வதற்கா என் மனதில் உன் நினைவுகளை மட்டும் விதைத்து சென்றாய்........
விதைத்துச் சென்ற நினைவுகள் வளர்ந்து கவலைக் கனிகளைத் தருகிறது.......
இரக்கமில்லா காதலியே ஏன் இப்படி செய்தாய்...........
நீ தந்துச் சென்ற கவலைக் கனிகளை மெல்லவும் முடியாமல் உண்ணவும் முடியாமல் தவிக்கிறேன்.......
ஓன்று மட்டுமே இறுதியை சொல்கிறேன்,
கடைசி வரையில் நீ மட்டுமே என் காதலி(இல்லை இல்லை மனைவி)
திரும்பி வர மாட்டாய் எனத் தெரிந்தும்,
உனக்காக காலமெல்லாம் காத்திருப்பேன்,
எத்தனை ரணங்களையும் தாங்கி..........