சொதனைகூடத்தின் எலியானேன் ..

வாளினும் வலியதாய்
உன் விழிகள் இருக்கலாம்..

அதனை பரீச்சித்து பார்க்க..
என் இதயம் தானா
கிடைத்தது உனக்கு..

தேனினும் இனியதாய்
உன் வார்த்தைகள் இருக்கலாம்.

கவிதை எழுதி பழக
என் வாழ்க்கை தானா
கிடைத்தது உனக்கு...
.
சோதனைக்கூடத்தின் எலியாய்
எனை மாற்றிவிட்டு..

உன்னதமான என் காதலை
சிதைத்து விட்டு
யாரோடு மேடை ஏறினாய்
கல்யாண பட்டம் பெற..

எழுதியவர் : kavithaayini (2-Oct-11, 2:52 pm)
சேர்த்தது : சத்யப் பிரியா
பார்வை : 291

மேலே