முருகன்

. முருகன்.
😷😷😷😷😷😷😷😷😷😷
உயர்ந்த இடத்தில் அமர்ந்தேதான்
உலக நடப்பை கவனிப்பேன்...

ஆண்டுக்கு ஒருமுறை கீழிறங்கி
வேண்டுதலுக்கு எல்லாம் செவிமடுப்பேன்...

ஊரில் மக்களை மகிழ்விக்க
தேரில் ஒருமுறை வலம்வருவேன்...

எரிபொருள் எனக்கு ஏற்றமில்லை --என்
பயணத் தொலைவிலும் மாற்றமில்லை...

அழகாய் நடந்தேறும் தைப்பூசம்
அதிலும் இவ்வாண்டு பெருநாசம்...

காவடி தூக்கும் பக்தா உன்னை
சாகடிக்க துணியுது நோய்த்தொற்று...

ஊசியை போட்டும் உயிர் பயத்தால்
நாசியை மறைத்தே வாழுகிறாய்...

மனிதனைக் கண்டு மனிதர்களே
மருண்டே தனித்து ஓடுகிறாய்...

பத்மாசுரனை வதம் செய்த
பலத்தை முழுவதும் நான் தொடுத்தும்....

தாக்கம் தொற்றிலும் குறையவில்லை --என்
காக்கும் முயற்சியிலும் வெற்றியில்லை...

மனிதா உன்னை நினைந்திட்டால்
மனதில் எனக்கே பயந்தான்டா....

இனிதான் தீர்வைத் தேடிடனும்
இதிலிருந்து உன்னை காப்பதற்கு...

அதுவரை....

உத்திரவாதம் உன் உயிர்க்கு
உலகத்தில் நீயேதான் தெரிஞ்சுக்கோ...

பத்திரமாக உயிர் வாழ
பக்குவ முறையை அறிஞ்சுக்கோ......

😷😷😷😷😷😷😷😷😷😷😷

எழுதியவர் : க.செல்வராசு (19-Jan-22, 8:48 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 68

மேலே