ஏனைய பெரியவர்கள்

பெரியவர்களின்
பாதம் தொட்டு வணங்குவது
பண்பாட்டின் சிறப்பு ,
தொடப்படும் காலுக்கு
சொந்தமானவரின்
செல்வாக்கு , குண நலன்களை
தனக்கும் கிடைக்க
தாள் பணிந்து வேண்டுவது

பெரியவர்களின் பாதத்தைத்
தொட குனியும்போது
சிரசுக்கு அதிகம் செல்லும்
இரத்தத்தால்
உள்ளமும், உடலும் நலம் பெறும்
உற்சாகம் பெருகும்
நமக்கும், நாட்டுக்கும் பயனளிக்கும்
நல்ல பழக்கங்கள்

எத்தனையோ தியாகங்கள்
செய்து வளர்த்து ஆளாக்கிய
பெற்றோருக்குக் காட்டும் நன்றிக்
கடன் என்று கொண்டாலும்
தாள் பணிய முதன்மையானவர்கள்
பெற்றோர்களே, அடுத்து குரு
அதன் பின் தான் ஏனைய
பெரியவர்கள்

எழுதியவர் : கோ. கணபதி. (19-Jan-22, 10:35 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : enaiya periyavargal
பார்வை : 39

மேலே