ஆசைகள்

💐💐💐💐💐💐💐💐💐💐💐

*என் ஆசைகள்*

படைப்பு *கவிதை ரசிகன்*

💐💐💐💐💐💐💐💐💐💐💐

பஞ்சம் இல்லாத பாரதம் வேண்டும்...
லஞ்சம் இல்லாத சமுதாயம் வேண்டும்..
வறுமை இல்லாத வாழ்க்கை வேண்டும்
சிறுமை இல்லாத செயல்கள் வேண்டும்
ஊழல் இல்லாத அரசியல் வேண்டும்....


விபத்துக்கள் இல்லாத
சாலைகள் வேண்டும்
அலட்சியம் இல்லாத
அதிகாரிகள் வேண்டும்
ஆபாசம் இல்லாத
திரைப்படம் வேண்டும்

காமம் இல்லாத காதல் வேண்டும்
மதங்கள் இல்லாத மனிதர்கள் வேண்டும்
ஜாதிகள் இல்லாத வீதிகள் வேண்டும்

சுயநலம் இல்லாத
வாழ்ககை வேண்டும்
அச்சமில்லாத மனங்கள் வேண்டும்
தற்புகழ்ச்சி இல்லாத
பேச்சுக்கள் வேண்டும்

வன்முறைகள் இல்லாத
போராட்டம் வேண்டும்
பொறாமை இல்லாத
போட்டிகள் வேண்டும்
பிரிவுகள் இல்லாத
குடும்பங்கள் வேண்டும் .....

போலிகள் இல்லாத
முகங்கள் வேண்டும்...
வேற்றுமை இல்லாத
கிராமங்கள்.... வேண்டும்
அவன் நம்பிக்கை இல்லாத
முயற்சிகள் வேண்டும்

அழிவு இல்லாத
அறிவியல் வேண்டும்
சோம்பல் இல்லாத
ஆசிரியர்கள் வேண்டும்...
வரதட்சணை இல்லாத
திருமணம் வேண்டும்
கருத்து வேறுபாடு இல்லாத
கணவன் மனைவி வேண்டும்

அசுத்தம் இல்லாத
சூழ்நிலை வேண்டும்
பணத்தாசை இல்லாதத்
தலைவர்கள் வேண்டும்...
விபச்சாரம் இல்லாத
பெண் சமுதாயம் வேண்டும் ....
சாமியார்கள் இல்லாத
ஆன்மீகம் வேண்டும்

அநீதிகள் இல்லாத
நீதிமன்றங்கள் வேண்டும்
பழுதுகள் இல்லாத
பொழுதுபோக்கு வேண்டும் ....
அழிவு இல்லாத
நூல்கள் வேண்டும்

ஏழைகள் இல்லாத
இந்தியா வேண்டும்
கல்லாதவர்கள்
இல்லாத காலம் வேண்டும்

கலப்படம் இல்லாத
பொருள்கள்
வேண்டும்
பாதிப்பு இல்லாத
முன்னேற்றம் வேண்டும்
கற்பழிப்பு இல்லாத
பாரதம் நிலையம் வேண்டும்
மூட நம்பிக்கை இல்லாத பழக்கவழக்கங்கள் வேண்டும்
வேஷம் இல்லாத பாசம் வேண்டும்......

*கவிதை ரசிகன்*

எழுதியவர் : கவிதை ரசிகன் (19-Jan-22, 10:56 pm)
Tanglish : aasaikal
பார்வை : 44

மேலே