அழகே திமிரே -3

அழகே திமிரே -3மிக அருமையாக எல்லா விதமான வசதிகளுடன் கட்டப்பட்ட மருத்துவமனை அது.......


எங்கிலும் அட்வான்ஸ் டெக்னாலஜி..... எல்லாமே கோல்ட் மெடல் வாங்கிய டாக்டர்ஸ்.... அதனால் சிட்டிலேயே பெரிய மருத்துவமனை என்ற பெயர்... பில் என்ற பேரில் கொள்ளை லாபம்.....


இந்த காலத்தில் வியாதிக்கா பஞ்சம்.... குறைவில்லாத நோயாளிகளின் கூட்டம் என் பிசியாவே இருந்தது அந்த ஹாஸ்பிடல்......


"ICU"- என்ற போர்டு போட்டிருந்த அறையினும் நுழைந்து அந்த உருவம்...... அங்கே எப்போதும் குறைந்த பட்சம் 2 நோயாளிகளாவது இருப்பது வழக்கம்.... அந்த உருவத்தின் நல்ல நேரமோ இல்லை அங்கே படுத்திருதவனின் கெட்ட நேரமோ.... அன்று அவன் மட்டும் தனியே இருந்தான்.... உடலில் எந்த அசைவும் இல்லை... "ECG" மீட்டர் மட்டும் அவன் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை உறுதி படுத்தியது.....


மெதுவாக அவன் அருகில் வந்தது ஓடி கொண்டிருந்த ஆக்சிஜன் சப்ளையை கட் செய்தது.......


. அங்கே படுத்திருந்தவனின் உடல் துடிக்க ஆரம்பித்தது...... பல்ஸ் ரேட் குறைந்தது..... ECG யும் தன் பங்கிற்கு சிறிது நேரம் கத்திவிட்டு..... பின் நேர் கோடானது.......ஏதும் தெரியாதது போல வெளியே வந்தது அந்த உருவம்... ஹாஸ்பிடல் வெளியே அதே கருப்பு கார் நின்றது..... அதன் பின் இருக்கையில் அமர்ந்தது..... முன் இருக்கையில் அன்று பைக்கில் பின் தொடர்ந்து வந்தானே அவன் இருந்தான்.....
அவன் பெயர் சக்தி....


சக்தி : முடிஞ்சிதா....

. அதற்க்கு தன்.கட்டை விரலை மட்டும் தூக்கி thumps up காட்டியது.....

கல்லூரி முதல் நாள் மிக அருமையாக சென்றது ஷாலினிக்கு.... புதிதாக நண்பர்கள் கிடைத்தார்கள்..... அவளை எல்லோருக்கும் பிடித்திருந்தது.....


சில நாட்கள் செல்ல கல்லூரியில் தவறாக சில காரியங்கள் நடப்பதை கண்டறிந்தாள் ஷாலினி...

விடுமுறை தினகளில் காலேஜ் கிரௌண்டில் கார்த்திக் கும் அவன் நண்பர்களும் குடிப்பது.... போதை மருந்து உபயோகிப்பது எல்லாமே செய்வார்கள்.... அவர்களின் பெற்றோரும் எடுத்து சொல்லியும் பார்த்தார்கள்... அடித்தும்
பார்ததார்கள்.. எதற்கும் அசைவதாய் இல்லை இந்த மூடர் கூட்டம்..


. ஒரு கட்டத்திற்கு மேல் தண்ணீர் தெளித்து. விட்டார்கள்.... அதையே இவர்கள் சாதகமாக எடுத்து கொண்டு அதே சகதியிலே கிடைக்கிறார்கள்....


இப்போதெல்லாம் கல்லூரி நாட்களிலும் அவர்களின் அட்டூழியம் தொடர்ந்தது..... அவர்களுடன் இருந்தவங்களில் ஒருவன் மினிஸ்டர் மகன் ஆகையால் கல்லூரி நிர்வாகமும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கியது.....

. மாணவர்களில் ஒருவன் அவர்களை பற்றி புகார் எழுதி கொடுக்க.... அவனை எழுதி அவன் வகுப்பிருக்கே வந்தான் கார்த்திக்...
புகார் கொடுத்த அவன் கெமிக்கல் என்ஜினீயரிங் பைனல் இயர்.. ஷாலினின் வகுப்பு...

வகுப்பிற்குள் நுழைந்தான் கார்த்திக்.... விரிவுரையாளர் வகுப்பெடுத்து கொண்டிருந்தார்.... அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத கார்த்திக்.... நேரே ஷாலினிக்கு அடுத்த பெஞ்சில் அமர்ந்திருந்தவனின் சட்டையை பிடித்து கொத்தாக தூக்கினான்....

ஷாலினி ஏதோ சொல்ல போக அவள் தோழி அவளை பிடித்து தடுத்து வைத்தாள்..... புகார் குடுத்தவனுக்கு கார்த்திக் குடுத்த மொத்த அடியும் ஷாலினியின் இரு விழிகளில் பதிந்தது.... அவனது உருவமும் தான்....

தன் ஆத்திரம் தீர அடித்துவிட்டு எதுமே சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றான்..... அடிவாங்கியவனுக்கு அவமானமாய் இருந்தது.....


விரிவுரையாளரும் அவன் நண்பர்களும் அவனுக்கு உதவி செய்தார்கள்.... இதை எல்லா பார்த்த ஷாலினிக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.....

ஷாலினி : ஹே என்னடி இதெல்லாம் கிளாஸ் குள்ளேயே வந்து இப்டி ஒரு ஸ்டுடென்ட் அடிக்கிறான்.... ஸ்டாப் யாருமே கண்டுக்கல என்ன நடக்குது இங்க....


நேஹா : ஷாலு நீ இதுலல்லாம் தலை இடாத... அவன் பெரிய பொறுக்கி.... அவனை பத்தி கம்பளைண்ட் பண்ணதாலதான் கிஷோர் க்கு இவ்ளோ அடி.... அவன் விஷயத்துல தலையிடாம இருக்குறது தான் சேப்.... சொன்ன புரிஞ்சிக்க....

அவள் எவ்வளவு சொல்லியும் ஷாலினியின் மனம் சமாதானம் ஆகவில்லை....


மறுநாள் காலை.....

. கார்த்திக்கின் மொபைலுக்கு வந்தது அந்த வீடியோ... அவனும் அவன் நண்பர்களும் காலேஜ்லக்கு பின் புறம் உள்ள பகுதியில் குடித்து விட்டு ஆட்டம் போட்ட வீடியோ... 3 நிமிடங்களுக்கு குறையாமல்... அவனைவரில் முகங்களும் தெரியும் வகையில் தெள்ள தெளிவாக எடுக்கப்பட்டிருந்தது....

அதை பார்த்த கார்த்திக்கு கோபம் தலைக்கு ஏற... அவன் நண்பர்களை தேடி கல்லூரிக்கு புறப்பட்டான்..


அதற்குள் அந்த வீடியோ கல்லூரி முழுவதும் பரவ..... எல்லோர் முகத்திலும் ஒரு ஏளன சிரிப்பை கண்டான் கார்த்திக்...
அது இன்னும் அவன் ஆத்திரத்தை கிளப்பிவிட....... நேராக தன் சகாகளிடம் வந்தான்....

கார்த்திக் : டேய்... எவன் டா வீடியோ எடுத்தது... எவனுக்கு டா இவ்ளோ தைரியம்... நேத்து வரைக்கும் பயந்தவனேல்லாம் பார்த்து சிரிக்கிறான்டா.... அவமானமா இருக்கு.... யாரு டி அது.... அந்த கிஷோர் பயலா..


பாலா :(அந்த கூட்டத்தில் ஒருத்தன்.) டேய் மச்சான் நீ அடிச்ச அடில அவன் ஹாஸ்பிடல் ள இருக்கான் டா இது அவன் இல்ல.....


கார்த்திக் : அப்போ யாரோட வேலைட இது....

அவன் கர்ஜித்து கொண்டிருக்கும்போது...

செல்வா : டேய் மச்சான் எல்லாம் விசாரிச்சுட்டோம்... அது ஒரு பொண்ணு பைனல் இயர் கெம்மிக்கல் டிபார்ட்மெண்ட்.... புதுசு போல.... வாட்ச் மென்க்கு பணம் குடுத்து நம்மல வீடியோ எடுக்க வச்சிருக்கா... அவனை நாலு தட்டு தட்டுனதும் எல்லா உண்மையும் சொல்லிட்டான்.....


பாலா : ச்ச..... ஒரு பொண்ணா....

அவன் பங்கிற்கு ஏத்திவிட கார்த்திக்கின் கோபம் முழுவதும் ஷாலினி. மீது திரும்பியது.......

கார்த்திக் : எங்கடா இருக்க அவ....


கேன்டீன்லிருந்து வகுப்பு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள் ஷாலினியும் நேஹாவும்..


நேஹா : ஹே ஏன் டி இப்டி பண்ணுன... நான் உன்கிட்ட எவ்ளோ சொன்னேன் அவன் விஷயத்துல தலையிடாதன்னு.... அவன் ரொம்ப மோசமானவன் டி... என்ன செய்ய போறானோ....

ஷாலினி : ஹே ஓவரா பயப்படாத இவனமாதிரி நான் பலபேரை பாத்துருக்கேன்....

நேஹா : நீ பாத்தவங்க எல்லாம் சந்தோஷத்துக்காக குடிக்கிரவங்க... ஆன இவன் தன் கோபத்துகாக குடிக்கிரவன்...

ஷாலினி : என்ன.....

நேஹா ஏதோ சொல்ல வந்த நேரம் நேஹாவும் ஷாலினியும் கார்த்திக் கண்ணில் பட்டார்கள்....


செல்வா : டேய் மச்சான் இதோ வர பாரு ரெட் சுடி அவ தான்....


நேஹா கார்த்திக் பற்றி சொல்ல வாயெடுத்த நேரம் அந்த குட்டி சுவற்றை தாண்டி ஷாலினி முன் வந்து குதித்தான் கார்த்திக்.......

ஷாலினியும் நேஹாவும் பயத்தில் ஒரு அடி நகர்ந்தார்கள்.... ஷாலினியை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான் கார்த்திக் .... அவள் கையிலிருந்த கைபேசியை பிடுங்கினான்....

நேஹா. "என்ன செய்ய போறானோ தெரியலையே" என்று பயந்து நடுங்கி கொண்டிருந்தாள..... ஷாலினியோ "என்ன தான் செய்வான் பார்க்கலாம்" என்று தைரியமாக நின்றாள்... அவள் தைரியம் அவனுக்கு இன்னும் கோபத்தை தந்தது....


ஷாலினியின் கைபேசியில் galary option -யை ஓபன் செத்தான்.... அதில் வீடியோவில் அவர்களை இவள் எடுத்த படம் இருந்தது...

கார்த்திக் : ம்ம்ம்..... நல்லா காஸ்டலியான போன் தான்.... வீடியோ கிளாரிட்டி எல்லாம் செமையா இருக்கும்ல....

அந்த option-ஐ விட்டு வெளியே வந்து கேமராவை ஆன் செய்தான்....


கார்த்திக் : டெஸ்ட் பண்ணிடுவோம்.... எடுறா மச்சான்

என்று செல்வாவிடம் அந்த மொபைலை தூக்கி போட்டான்..... கண் இமைக்கும் நேரத்தில் ஷாலினியின் இதழில் தன் இதழ்களை சேர்த்தான்.....

ஷாலினி அவனை விலக்க மிகவும் முயற்சி செய்தாள்..... ஆனாலும் அவனின் இரும்பு கரம் அவளை அடக்கியது.....

நேஹாவிற்கு அதிர்ச்சியில் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளாவே சில நொடிகள் ஆனது....


மூன்று நிமிடங்களுக்கு குறையாமல் அவள் இதழ் களை ருசி பார்த்தான்...... அது எல்லாமே அவளின் மொபைலில் பதிவானது....


வர்ஷாவிற்கு பிறகு அவன் தொடும் முதல் பெண் ஷாலினி தான்......


3 நிமிடங்களுக்கு பிறகு அவள் இதழ்களுக்கு விடுதலை கொடுத்தான்...
.. செல்வாவிடமிருந்து அந்த மொபைலை வாங்கி அந்த முத்த காட்சியை ஒட்டி பார்த்தான்....


இவன் கொடுத்த முத்ததால் செயலற்று நின்று கொண்டிருந்தாள் ஷாலினி.... அவள் கையில் அந்த மொபைலை திணித்தான்....


கார்த்திக் : யார் என்ன தப்பு பண்ணாலும் வீடியோ எடுத்து எல்லாருக்கும் அனுப்புவியாமே...... இப்போ இத அனுப்பு....

என்று திரும்பி பார்க்காமல் சென்றான்....

எழுதியவர் : நிலாமகள் (20-Jan-22, 8:41 am)
சேர்த்தது : nilamagal
பார்வை : 209

மேலே