கண்டது காமுற்று வவ்வார் விடுதல் இனிது - இனியவை நாற்பது 36

இன்னிசை வெண்பா

அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது. 36

- இனியவை நாற்பது

பொருளுரை:

மனம் வேறுபட்டு பொறாமைச் சொற்களைச் சொல்லாமலிருப்பது மிக இனியது.

மனவேறுபாடின்றி ஒழுக்கமுடையவனாக, கோபத்தைப் பகைத்து நீக்கி வாழ்வது இனியது.

மனம் பிடிவாதமாக இருக்க, தாங்கள் கண்ட பொருளைப் பெற விரும்பி, சமயத்தை
எதிர்பார்த்து பிறர் பொருளை அபகரிக்காதவராய் அந்த எண்ணத்தை மறந்து விடுவது இனியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-22, 8:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே