பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல் - இனியவை நாற்பது 35

இன்னிசை வெண்பா

ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியும் மாண்பினிதே
முற்றான் தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே
பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல்
வெற்றிவேல் வேந்தர்க் கினிது. 35

- இனியவை நாற்பது

பொருளுரை:

வெற்றியைத் தருகின்ற வேலையுடைய அரசனுக்கு ஒற்றரைக் கொண்டு எல்லா இடங்களிலும் நிகழ்வனவற்றை ஒற்றுவித்து அவற்றின் பயனை ஆராயும் பெருமை இனியது.

பிறர் செய்யும் குற்றங்களை தானே முதலிலேயே ஆராய்ந்து முறையாக தண்டம் செய்வது மிக இனியது.

ஒருவர்க்குப் பற்றிலனாய் எல்லார்க்கும் அப் பற்றினைப் பகுத்து எல்லாரிடத்தும் அவர்தம் தன்மை அறிந்து, தானும் சென்று குற்றமுளதா என்று அறிவது இனியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-22, 8:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

சிறந்த கட்டுரைகள்

மேலே