சுழற்சியின் சூட்சுமம்
மாறிக்கொண்டே இருக்கும் காலம்
மாரி கோடை
முன்பனி பின்பனி
இனிமையாகக் கொஞ்சம்
இளவேனில்
ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்விலும்
இக் கோலம் !
மாறியபடியே மாறினும்
மீண்டும் மீண்டும்
வந்துதான் செல்கின்றன
இன்பமும் துன்பமும் !
சுழற்சியின் சூட்சுமம் அறிந்தோர்க்கு
அழற்சியொன்றும் இல்லை!
நாடோறும் மகிழ்ச்சி மகிழ்ச்சியே !!
-யாதுமறியான்.